அஸ்வின் - புகழின் ‘என்ன சொல்ல போகிறாய்’ படப்பிடிப்பு நிறைவு: கேக் வெட்டி கொண்டாட்டம்
அஸ்வின் - புகழ் நடிக்கும் ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
தமிழ் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்ற ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கவனம் ஈர்த்தவர்கள் புகழ், அஸ்வின். தற்போது இருவரும் ’என்ன சொல்ல போகிறாய்’ படத்தில் இணைந்துள்ளனர். அஸ்வின் ஹீரோவாகவும் புகழ் நகைச்சுவை நடிகராகவும் நடித்துள்ளார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூலை 19 ஆம் தேதி பூஜையுடன் தொடங்கிய நிலையில், இன்று படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை , அஸ்வின், புகழ் உள்ளிட்டப் படக்குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இப்படத்தின் அறிவிப்பு புத்தாண்டையொட்டி வெளியானது. இந்த நிலையில், இவர்கள் நடிக்கும் படத்திற்கு ‘என்ன சொல்ல போகிறாய்’ என்று தலைப்பு வைத்து அதிகாரபூர்வமாக வெளியிட்டது படக்குழு.
இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. இந்தப் பூஜையில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பங்குபெற்ற சிவாங்கி, நடிகை ஷகிலா, செஃப் தாமு உள்ளிட்டப் படலரும் கலந்துகொண்டனர்.