ஓடிடியில் வெளியாகும் அசோக் செல்வனின் ’சில நேரங்களில் சில மனிதர்கள்’

ஓடிடியில் வெளியாகும் அசோக் செல்வனின் ’சில நேரங்களில் சில மனிதர்கள்’

ஓடிடியில் வெளியாகும் அசோக் செல்வனின் ’சில நேரங்களில் சில மனிதர்கள்’
Published on

நடிகர் அசோக் செல்வனின் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதியை அறிவித்திருக்கிறார்கள் படக்குழுவினர்.

அசோக் செல்வன் நடிப்பில் கடந்த ஜனவரி 28 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகி கவனம் ஈர்த்தது ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’. இப்படத்தினை விஷால் வெங்கட் இயக்க ‘ஜெய் பீம்’ மணிகண்டன் வசனம் எழுதியிருந்தார். அஷோக் செல்வன், நாசர் மகன் அபி ஹாசன், நாசர்,கே.எஸ் ரவிக்குமார், மணிகண்டன், ரித்விகா உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள்.

விமர்சன ரீதியாக பாராட்டுக்களைக் குவித்த இப்படத்தின் தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகான டிஜிட்டல் உரிமையை ஆஹா தமிழ் ஓடிடி தளம் கைப்பற்றியிருந்தது. படம் வெளியாகி ஒரு மாதம் நிறைவடைவதையொட்டி வரும் பிப்ரவரி 25 ஆம் தேதி ஆஹா தளத்தில் வெளியாகிறது. இதனை உற்சாகமுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் அசோக் செல்வன். 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com