\
’பனி மலையில் ஒரு பயணம்’- கவனம் ஈர்க்கும் அசோக் செல்வனின் ‘நித்தம் ஒரு வானம்’ ஃபர்ஸ்ட் லுக்

’பனி மலையில் ஒரு பயணம்’- கவனம் ஈர்க்கும் அசோக் செல்வனின் ‘நித்தம் ஒரு வானம்’ ஃபர்ஸ்ட் லுக்

’பனி மலையில் ஒரு பயணம்’- கவனம் ஈர்க்கும் அசோக் செல்வனின் ‘நித்தம் ஒரு வானம்’ ஃபர்ஸ்ட் லுக்
Published on

அசோக் செல்வன் நடித்துவரும் புதிய படத்தின் தலைப்பும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான ‘ஓ மை கடவுளே’ சூப்பர் ஹிட்டுக்குப்பிறகு, அசோக் செல்வன் நடிப்பில் ‘தீனி’, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ உள்ளிட்டப் படங்கள் வெளியாகின. சமீபத்தில் வெளியான ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ பாராட்டுக்களைக் குவித்து வருகிறது. இப்படங்களைத் தொடர்ந்து ‘வான்’ இயக்குநர் கார்த்திக் இயக்கத்தில் நடித்து வருகிறார் அசோக் செல்வன்.  ‘நித்தம் ஒரு வானம்’ என்று தலைப்பிட்டுள்ள இப்படத்தின்  ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் துல்கர் சல்மான் வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தியுள்ளார்.

‘நித்தம் ஒரு வானம்’ - அழகியலாகவும் கவித்துவமாகவும் வைத்துள்ள தலைப்பு மட்டுமல்ல பனிமலையில் ரிது வர்மாவின் கையைப்பிடித்துக்கொண்டு அசோக் செல்வன் காதலுடன் நடப்பதும் ரசிக்க வைத்து கவனம் ஈர்க்கிறது. அசோக் செல்வனுடன் ரீது வர்மா, அபர்ணா பாலமுரளி, சிவாத்மிகா என மூன்று நாயகிகள் நடிக்கின்றனர். வயகாம் 18 ஸ்டுடியோஸ் இப்படத்தினை தயாரிக்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com