”அசோக் செல்வன் மூன்று நாயகிகளோடு நெருக்கமாக நடிப்பதைப் பார்க்க பொறாமையாக உள்ளது” - சதீஷ்

”அசோக் செல்வன் மூன்று நாயகிகளோடு நெருக்கமாக நடிப்பதைப் பார்க்க பொறாமையாக உள்ளது” - சதீஷ்
”அசோக் செல்வன் மூன்று நாயகிகளோடு நெருக்கமாக நடிப்பதைப் பார்க்க பொறாமையாக உள்ளது” - சதீஷ்

”நடிகர் அசோக் செல்வன் மூன்று நாயகிகளுடன் நெருக்கமாக நடிப்பதைப் பார்க்க பொறாமையாக உள்ளது” என்று ‘ஹாஸ்டல்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் சதீஷ் கூறியுள்ளார்.

அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர் இணைந்துள்ள ‘ஹாஸ்டல்’ படத்தை சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ளார். ரொமான்ஸ் காமெடி கதைக்களத்தைக் கொண்ட இப்படத்தினை ஆர்.ரவீந்திரன் தயாரித்துள்ளார். அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர், சதீஷ், நாசர், முனீஸ்காந்த், ரவி மரியா, ராகுல், கிரிஷ், கேபிஒய் யோகி மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்திற்கு போபி சசி இசையமைத்துள்ளார். பிரவீன் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். வரும் 28 ஆம் தேதி ‘ஹாஸ்டல்’ தியேட்டர்களில் வெளியாகவுள்ள நிலையில், இதன் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில், பங்கேற்ற நடிகர் சதீஷ்,

”’ஹாஸ்டல்’ ரொம்ப ஜாலியா வேலை பார்த்த படம். எல்லோரும் வாழ்க்கையில் அனுபவித்த கதைதான். நான் ஹாஸ்டலில் படித்ததில்லை. ஆனால், நண்பன் ஹாஸ்டல் போய் தங்கியிருக்கிறேன். அந்த நினைவுகளை இந்தப் படம் தூண்டிவிடும். அசோக் செல்வன் நடித்த ஒரு படம் சமீபத்தில்தான் வெளியானது. இப்போ அடுத்த படத்தோடு வந்து விட்டார். அவர் மூன்று நாயகிகளோடு நெருக்கமாக நடிப்பதை பார்க்க பொறாமையாக இருக்கிறது. பிரியா நெருங்கிய தோழியாக மாறிவிட்டார். நாசர் சார் மகளிர் மட்டும் படத்திற்கு பிறகு நல்ல காமெடியோடு நடித்துள்ளார். சுமந்த் முன்னதாகவே எனக்கு நண்பர். படத்தை நன்றாக எடுத்துள்ளார். படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி” என்று பேசிமுடித்தார். அவரைத் தொடர்ந்து பேசிய அசோக் செல்வன்,

“ஆரம்பத்தில், இந்த திரைப்படத்தில் நடிக்க எனக்கு தயக்கம் இருந்தது. ஆனால் சுமந்த் படத்தின் சாராம்சத்தை மட்டும் எடுத்துவிட்டு ஸ்கிரிப்டை முழுவதுமாக மாற்றியிருந்தார். பிரியா நன்றாக நடித்துள்ளார், சிறந்த மற்றும் தனித்துவமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து சிறந்த நடிகையாகிவிட்டார். சதீஷ் தனித்துவமான ஸ்கிரிப்ட்களுடன் முன்னணி பாத்திரத்தில் நடித்து, பெரிய உயரங்களை எட்டத் தொடங்கியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். க்ரிஷ் மற்றும் யோகி அவர்கள் ஹாஸ்டல் போன்ற நல்ல திரைப்படத்தின் மூலம் அறிமுகமானதற்கு நன்றி. நாசர் சார் எனக்கு ஒரு குடும்ப உறுப்பினர் போன்றவர், அவருடன் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. முனிஸ்காந்த், ரவி மரியா சார், அறந்தாங்கி நிஷா மற்றும் ஏனைய நடிகர்கள் அவர்களது பணியை சிறப்புடன் ஆற்றியுள்ளனர். அனைவரும் திரையரங்குகளில் படத்தைப் பார்த்து ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன். ரவி மரியா சார் சொன்னது போல, நகைச்சுவை ஒரு சீரியஸ் பிசினஸ். நாங்கள் அதை முழு மனதுடன் செய்ய முயற்சித்தோம்” என்று நிறைவாக பேசிமுடித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com