‘மாட்டிக்கொள்ளாதவரை எல்லா ஆண்களும் ராமர்களே” - கவனம் ஈர்க்கும் ‘மன்மத லீலை’ ட்ரெய்லர்

‘மாட்டிக்கொள்ளாதவரை எல்லா ஆண்களும் ராமர்களே” - கவனம் ஈர்க்கும் ‘மன்மத லீலை’ ட்ரெய்லர்

‘மாட்டிக்கொள்ளாதவரை எல்லா ஆண்களும் ராமர்களே” - கவனம் ஈர்க்கும் ‘மன்மத லீலை’ ட்ரெய்லர்
Published on

வெங்கட் பிரபு - அசோக் செல்வனின் ‘மன்மத லீலை’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான ‘மாநாடு’ கடந்த ஆண்டின் சூப்பர் ஹிட் படமானது. இதனைத்தொடர்ந்து அசோக் செல்வன் நடிப்பில் ‘மன்மதலீலை’ படத்தினை இயக்கி முடித்துள்ளார் வெங்கட் பிரபு. இப்படத்திற்கு வெங்கட் பிரபுவின் உதவி இயக்குநர் மணிவண்ணன் கதையை எழுதியுள்ளார். வெங்கட் பிரபுவின் 10-வது படமாக உருவாகியுள்ள ’மன்மத லீலை’ வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது.

சமீபத்தில் இப்படத்தின் கிளிம்ப்ஸ் கவனம் ஈர்த்த நிலையில், தற்போது ட்ரெய்லரை வெளியிட்டுள்ளது படக்குழு. ட்ரெய்லரின் ஆரம்பத்தில் ‘மாட்டிக்கொள்ளாதவரை எல்லா ஆண்களும் ராமர்களே” - ’இப்படிக்கு மாட்டிக்கொண்டவர்’ என்று போடும்போதே இது ‘வேற லெவல்’ படம் என்பதை உணர்த்தி எதிர்பார்ப்பை எகிற வைக்கிறார்கள்.

’உன்னைப் பார்க்கும்போது என் ஃபியூச்சர் ஞாபகம் வருது.. இன்னும் ரெண்டு பெக் போட்டா செத்துப்போன உன் ஆயா எல்லாம் ஞாபகம் வருவாங்க’ என்று காதலியுடனும் மனைவியுடனும் வழிந்துகொண்டே ரொமாண்டிக் ப்ளஸ் காமெடியில் கலகலப்பூட்டும் அசோக் செல்வனே ட்ரெய்லர் முழுக்க ஆக்கிரமித்திருக்கிறார். படத்திற்குக் ஏ சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். அதற்கேற்றார்போல் ரொமான்டிக் காட்சிகள் பார்வையாளர்களின் கண்களையும் இதயத்தையும் திணறடிக்கிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com