சீமத்துரை ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை நடிகர் ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
புவன் மீடியா வொர்க்ஸ் சார்பில் சுஜய்கிருஷ்ணா தயாரிக்கும் புதிய படம் சீமத்துரை. கீதன் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தை சந்தோஷ் தியாகராஜன் எழுதி இயக்குகிறார். நாயகியாக வர்ஷா பொல்லம்மா நடிக்கிறார். ஜோஷ் ஃப்ராங்க்ளின் இசையமைக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட ஆர்யா, ”படக்குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

