மாணவர்களுக்கு சைக்கிள்; படக் குழுவினருக்கு கேக் - பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடிய ஆர்யா

மாணவர்களுக்கு சைக்கிள்; படக் குழுவினருக்கு கேக் - பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடிய ஆர்யா
மாணவர்களுக்கு சைக்கிள்; படக் குழுவினருக்கு கேக் - பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடிய ஆர்யா

நடிகர் ஆர்யா தனது 41வது பிறந்தநாளை தனது படக்குழுவினருடன் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினார்.

குட்டிப்புலி, மருது, கொம்பன், விருமன், தேவராட்டம் போன்ற கிராமத்து கதைகளை மையப்படுத்தி பல வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் முத்தையா. இவர், தற்போது 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' என்ற பெயரில் புதிய படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அடுத்த எட்டயபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் நடந்து வருகிறது.இதில், நடிகர் ஆர்யா, நடிகை ஷித்தி இதானி, நடிகர் பிரபு உள்ளிட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று, நடிகர் ஆர்யா தனது 41-வது பிறந்த நாளை சூட்டிங் ஸ்பாட்டில் கொண்டாடத் திட்டமிட்டு அதன்படி நான்கு பெரிய கேக்குகளை பெயர் போல் அடுக்கி வைத்து அதில் மெழுகுவர்த்தி ஏற்றி கேக்கை வெட்டி கொண்டாடினார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட படக்குழுவினர் ஒவ்வொருவரும் ஆர்யாவிற்கு கேக் ஊட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இதையடுத்து நடிகர் ஆர்யா தனது பிறந்த நாளை அர்த்தமுள்ளதாக கொண்டாட எண்ணிய நிலையில், குறிஞ்சான் குளம், ஆராய்ச்சிபட்டி, இளவேலங்கால் உள்ளிட்ட கிராமங்களில் படிக்கும் தாய் அல்லது தந்தையரை இழந்த 10 மாணவ மாணவிகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு சுமார் ரூ.6000 மதிப்புள்ள அழகான சைக்கிள்களை தனது பிறந்தநாள் பரிசாக வழங்கினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com