நடிகர் ஆர்யாவின் சகோதரரும், நடிகருமான சத்யா தனது நீண்ட கால தோழியை கரம் பிடித்துள்ளார்.
நடிகர் ஆர்யாவின் சகோதரர் சத்யா. ‘அமர காவியம்’ உள்பட ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தனது நீண்ட கால தோழியான பாவனாவை இன்று அவர் கரம் பிடித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற இந்தத் திருமண நிகழ்வில் சத்யாவின் நண்பர்கள், உறவினர்கள், திரையுலக பிரபலங்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ என்ற நிகழ்ச்சி சமீபத்தில் ஒளிபரப்பானது. ஆர்யா தனக்கான வாழ்க்கை துணையை தேடுவதே இந்த நிகழ்ச்சியாகும். நிகழ்ச்சியின் முடிவில் அதில் பங்கேற்ற எந்தப் பெண்ணையும் அவர் திருமணம் செய்துகொள்ள சம்மதம்சொல்லவில்லை. இதனால் இந்த நிகழ்ச்சி குறித்து சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் ஆர்யாவின் தம்பி திருமணம் செய்துள்ளார்.