\
ஜல்லிக்கட்டுக்கு எதிராக ஒருபோதும் செயல்படவில்லை.. நடிகர் ஆர்யா விளக்கம்

ஜல்லிக்கட்டுக்கு எதிராக ஒருபோதும் செயல்படவில்லை.. நடிகர் ஆர்யா விளக்கம்

ஜல்லிக்கட்டுக்கு எதிராக ஒருபோதும் செயல்படவில்லை.. நடிகர் ஆர்யா விளக்கம்
Published on: 

ஜல்லிக்கட்டுக்கு எதிராக தாம் ஒருபோதும் செயல்படவில்லை என நடிகர் ஆர்யா தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் பக்கத்தில் தாம் பதிவிட்ட கருத்து தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மதுரையில் இயக்குனர் அமீரின் சந்தனத்தேவன் படத்தில் இடம்பெற்றுள்ள ஜல்லிக்கட்டு பாடல் வெளியிடும் நிகழ்வு நடந்தது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஆர்யா, பீட்டாவின் ஆதரவாளன் இல்லை. நம்முடைய கலாசாரத்துக்கு ஜல்லிக்கட்டு தேவை என்பதால் போராட்டம் வேண்டும் என்று தெரிவித்தார். முன்னதாக ஜல்லிக்கட்டு குறித்து ட்விட்டரில் பதிவிட்ட ஆர்யாவுக்கு எதிர்ப்புகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com