\
ஆக்‌ஷன் காட்சிகளுடன் வெளியான அருண் விஜய்யின் ‘யானை’ ட்ரெய்லர்

ஆக்‌ஷன் காட்சிகளுடன் வெளியான அருண் விஜய்யின் ‘யானை’ ட்ரெய்லர்

ஆக்‌ஷன் காட்சிகளுடன் வெளியான அருண் விஜய்யின் ‘யானை’ ட்ரெய்லர்
Published on

அருண் விஜய்யின் ‘யானை’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஹரியும் அருண் விஜய்யும் முதன்முறையாக ‘யானை’ படத்தில் இணைந்துள்ளனர். யோகி பாபு, சினேகன், ராதிகா,கங்கை அமரன், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வில்லனாக ‘கேஜிஎஃப்’ புகழ் கருடா ராம் நடித்துள்ளார். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

கடந்த ஆண்டு தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்து. ‘யானை’ படத்தின் தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகான டிஜிட்டல் மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை ஜீ5 ஓடிடி தளம் கைப்பற்றியிருக்கிறது. வரும் ஜூன் 17 ஆம் தேதி ‘யானை’ வெளியாகவுள்ள நிலையில், இன்று ட்ரெய்லரை வெளியிட்டுள்ளது படக்குழு.

ட்ரெய்லரில், ‘மாயமா ஆனியே தெய்வமகளே’ என்று பாடல் தொடங்கி முழுக்க முழுக்க பாடல் ப்ளஸ் ஆக்‌ஷன் காட்சிகளால் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளார்கள். இறுதியில், அருண் விஜய் வசனம் பேசுகிறார். அது பெரிய அளவில் ஈர்க்கவில்லை. ஆக்‌ஷன் காட்சிகளும் பறந்து பறந்து அடிப்பதாகட்டும் கேமரா ஸ்பீடாகட்டும் ஹரி பாணியில் வழக்கான ஒரு படம் என்பதை உணர்த்துகிறது ‘யானை’ ட்ரெய்லர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com