\
படப்பிடிப்பின் போது நாகூர் தர்காவுக்குச் சென்று வழிபட்ட நடிகர் அருண் விஜய்

படப்பிடிப்பின் போது நாகூர் தர்காவுக்குச் சென்று வழிபட்ட நடிகர் அருண் விஜய்

படப்பிடிப்பின் போது நாகூர் தர்காவுக்குச் சென்று வழிபட்ட நடிகர் அருண் விஜய்
Published on: 

இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடித்துவரும் அருண் விஜய் படப்பிடிப்பு இடைவேளையில் நாகூர் தர்கா சென்று வழிபட்டுள்ளார்.

இயக்குநர் ஹரியும் அருண் விஜய்யும் முதன்முறையாக ‘அருண் விஜய் 33’ படத்தில் இணைந்துள்ளனர். கொரோனா இரண்டாவது அலைக்கு முன்பு கடந்த மார்ச் மாதம் தொடங்கிய, இப்படத்தின் படப்பிடிப்பு ஊரடங்கால் தடைப்பட்டுப் போனது.

இந்த நிலையில், தற்போது அரசு படப்பிடிப்பு நடத்த அனுமதி அளித்துள்ளதால் மீண்டும் கடந்த ஜூலை 28 ஆம் தேதிமுதல் ராமேஸ்வரம், தூத்துக்குடி, காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடைபெற்றது.

யோகி பாபு, சினேகேன், ராதிகா,கங்கை அமரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அருண் விஜய்க்கு அண்ணனாக சமுத்திரக்கனி நடிக்கிறார். இந்தநிலையில், இன்று ’அருண் விஜய் 33’ படப்பிடிப்பு இன்று நாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. அங்குள்ள புகழ்பெற்ற நாகூர் தர்காவில் நடிகர் அருண் விஜய் சென்று வழிபட்டார். அந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com