\
நேரடியாக ஓடிடியில் வெளியாகும் சூர்யா தயாரிப்பில் ‘ஓ மை டாக்’

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் சூர்யா தயாரிப்பில் ‘ஓ மை டாக்’

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் சூர்யா தயாரிப்பில் ‘ஓ மை டாக்’
Published on

சூர்யா தயாரிப்பில் நடிகர் அருண் விஜய் மகன் அர்னவ் விஜய் நடிக்கும் ’ஓ மை டாக்’ ஓடிடியில் வெளியாகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இயக்குநர் சரவ் சண்முகம் இயக்கத்தில் அர்னவ் விஜய் நடிக்க, நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கும் ’ஓ மை டாக்’ படத்திற்கு கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார். அர்னவிற்கு தந்தையாக அருண் விஜய்யே நடித்துள்ளார். சிறுவனுக்கும் அவன் வளர்க்கும் நாய்க்கும் இடையேயான பாசப்பிணைப்புதான் கதைக்களம் என்று சொல்லப்படுகிறது.

சமீபத்தில் இப்படத்தின் டப்பிங் பணிகள் நிறைவடைந்து புகைப்படங்களும் வெளியாகின. இந்தநிலையில், ’ஓ மை டாக்’ நேரடியாக இம்மாதமே அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் ட்ரெய்லரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com