ஹரி படத்தின் சண்டைக் காட்சி: நடிகர் அருண் விஜய்க்கு காயம்

ஹரி படத்தின் சண்டைக் காட்சி: நடிகர் அருண் விஜய்க்கு காயம்
ஹரி படத்தின் சண்டைக் காட்சி: நடிகர் அருண் விஜய்க்கு காயம்

இயக்குநர் ஹரியின் ‘அருண் விஜய் 33’ படத்தின் படப்பிடிப்பில் நடிகர் அருண் விஜய்க்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இயக்குநர் ஹரியும் அருண் விஜய்யும் முதன்முறையாக ‘அருண் விஜய் 33’ படத்தில் இணைந்துள்ளனர். கொரோனா இரண்டாவது அலைக்கு முன்பு கடந்த மார்ச் மாதம் தொடங்கிய, இப்படத்தின் படப்பிடிப்பு ஊரடங்கால் தடைப்பட்டுப் போனது. இந்த நிலையில், தற்போது அரசு படப்பிடிப்பு நடத்த அனுமதி அளித்துள்ளதால் மீண்டும் கடந்த ஜூலை 28 ஆம் தேதிமுதல் ராமேஸ்வரம், தூத்துக்குடி, காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். யோகி பாபு, சினேகேன், ராதிகா,கங்கை அமரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த நிலையில், தற்போது காரைக்குடியில் இரவு பகலாக இப்படத்தின் சண்டைக் காட்சி நடைபெற்று வருகிறது. அனல் அரசு சண்டைக் காட்சி அமைக்கிறார். நேற்று முன்தினம் இரவு எடுக்கப்பட்ட சண்டைக் காட்சியில் அருண் விஜய் நடித்தபோது எதிர்பாராமல் திடீரென்று வலது தோள்பட்டையில் அடி விழுந்தது. லேசான காயத்துடன் தப்பிய அருண் விஜய் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டு வருகிறார். ஓய்வுக்குப்பின் நாளை நடக்கும் சண்டைக் காட்சியில்அவர் கலந்துகொள்ளவுள்ளார். அருண் விஜய்க்கு காயம் ஏற்பட்டதையும் அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது படக்குழு.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com