\
கவனம் ஈர்க்கும் அர்ஜுன் - ஐஸ்வர்யா ராஜேஷின் ‘தீயவர் குலைகள் நடுங்க’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

கவனம் ஈர்க்கும் அர்ஜுன் - ஐஸ்வர்யா ராஜேஷின் ‘தீயவர் குலைகள் நடுங்க’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

கவனம் ஈர்க்கும் அர்ஜுன் - ஐஸ்வர்யா ராஜேஷின் ‘தீயவர் குலைகள் நடுங்க’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
Published on

அர்ஜுன் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ’தீயவர் குலைநடுங்க’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

'திட்டம் இரண்டு’, ‘பூமிகா’ படங்களுக்குப் பிறகு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிகர் அர்ஜுனுடன் புதிய படத்தில் நடித்து வருகிறார். க்ரைம் த்ரில்லரில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் 12-ஆம் தேதி பூஜையுடன் தொடங்கியது. அருள்குமார் தயாரிக்க தினேஷ் லக்‌ஷ்மணன் இப்படத்தை இயக்குகிறார்.

”ஒரு க்ரைம் த்ரில்லர் இன்வெஸ்டிகேஷன் கதை. கொடூரமான முறையில் ஒரு கொலை நிகழ்கிறது. அதனை விசாரிக்கும் பின்னணியில் அழுத்தமான க்ரைம் த்ரில்லர் பாணியில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. மன இறுக்கம் கொண்ட ஆட்டிஸ்டிக் குழந்தைகளின் பின்னணியில் ஒரு பெண் கதாப்பாத்திரம் மைய கதாப்பாத்திரமாக அமைக்கப்பட்டுள்ளது. எந்தவித கதாப்பாத்திரம் தந்தாலும் தனது திறமையான நடிப்பின் மூலம் அசத்தும், நடிகை ஐஷ்வர்யா ராஜேஷ் இந்தப் படத்தில் முதன்மை பெண் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நடிகர் அர்ஜூன் இன்வெஸ்டிகேடிவ் ஆபீஸராக நடிக்கிறார். ரசிகர்களுக்கு புது அனுபவம் தரும் த்ரில்லர் படம் இது” என்று இப்படத்தின் இயக்குநர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இருள் மழையில் குடையுடன் அர்ஜுன் நிற்க... பைபிளைக் கையில் வைத்துக்கொண்டு மிரட்டல் பார்வையுடன் ஐஸ்வர்யா ராஜேஷ் அமர்ந்திருக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மட்டுமல்ல ‘தீயவர் குலைகள் நடுங்க’ டைட்டிலும் கவனம் ஈர்த்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com