நடிகரும் இயக்குநருமான விசு காலமானார்

நடிகரும் இயக்குநருமான விசு காலமானார்
நடிகரும் இயக்குநருமான விசு காலமானார்

நடிகரும் இயக்குநருமான விசு உடல்நலக்குறைவால் காலமானார்.

தமிழ் சினிமாவின் தனித்துவம் மிக்க இயக்குநரிகளில் முதன்மையானவர் விசு. நாடகத்துறையில் இருந்து வந்த முக்கியமான இயக்குநர்களில் இவரும் ஒருவர். இயக்குநர் பாலச்சந்தரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த இவர், பிறகு தனித் தன்மையுடன் குடும்ப திரைப்படங்களை எடுத்து அதில் சாதித்தும் காட்டினார்.

இவர் இயக்கத்தில் வெளியான ‘சம்சாரம் அது மின்சாரம்’ மாபெரும் வெற்றி படமாக ஓடியது. அந்த வெற்றியை தொடர்ந்து பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. மேலும் இவர் ‘மணல் கயிறு’, ‘பட்டுக்கோட்டை பெரியப்பா’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கினார். மேலும் இவர் நடித்த ‘அருணாச்சலம்’,‘மன்னன்’,‘உழைப்பாளி’ ஆகிய பெரிய வரவேற்பை பெற்றன. இப்படத்தில் ரஜினியுடன் இவர் இணைந்து நடித்திருந்தார். ரஜினிகாந்த் நடித்திருந்த ‘தில்லுமுல்லு’ படத்திற்கு இவர்தான் வசனம் எழுதினார். அந்தப் படம் வசனத்திற்காகவே பெரிதும் பேசப்பட்டது.

நாடகம், சினிமா, சின்னத்திரை என இவர் பயணித்த துறைகளில் எல்லாம் தனி முத்திரை பதித்தவர் விசு. குறிப்பாக தொலைக்காட்சியில் இவர் ‘அரட்டை அரங்கம்’ என்ற நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து பட்டித்தொட்டி முழுக்க பட்டிமன்றங்களை நடத்தினார். பல வருடங்கள் தொடர்ந்து இந்நிகழ்ச்சி ஒளிபரப்பானது.

1945ஆம் ஆண்டு பிறந்த விசு, சில வருடங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். இந்நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். இவருக்கு வயது 74. உமா என்பவரை திருமணம் செய்துகொண்ட விசுவிற்கு 3 மகள்கள் உள்ளனர். இவர்கள் மூவரும் திருமணமாகி அமெரிக்காவில் உள்ளனர். தமிழ்த்திரை உலகிற்கு இவரது இழப்பு பெரும் இழப்பாகும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com