சினிமா
’வினோதய சித்தம்’ வெற்றியைத் தொடர்ந்து ‘அப்பா 2’ இயக்கும் சமுத்திரக்கனி
’வினோதய சித்தம்’ வெற்றியைத் தொடர்ந்து ‘அப்பா 2’ இயக்கும் சமுத்திரக்கனி
’அப்பா 2’ படத்தை இயக்கவிருப்பதாக சமுத்திரக்கனி அறிவித்திருக்கிறார்.
நடிகர் சமுத்திரக்கனி இயக்கி நடித்து சமீபத்தில் ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியான ‘வினோதய சித்தம்’ கவனம் ஈர்த்து பாராட்டுகளைக் குவித்து வருகிறது. அடுத்ததாக பா.ரஞ்சித் தயாரிப்பில் ‘ரைட்டர்’ படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த நிலையில், சமுத்திரகனி அடுத்ததாக இயக்கி நடிக்கும் ‘அப்பா 2’ படத்தை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு இளையராஜா இசையில் சமுத்திரக்கனி, தம்பி ராமையா, வினோதினி, சசிக்குமார் உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியான ‘அப்பா’ பெற்றோர்களின் கவனம் ஈர்த்தது. அது வரவேற்பை பெற்றதால் ‘அப்பா 2’ படத்தை தற்போது தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார் சமுத்திரக்கனி.