\
டிசம்பர் 17-ல் வெளியாகும் அல்லு அர்ஜுன் - ஃபகத் ஃபாசிலின் 'புஷ்பா'

டிசம்பர் 17-ல் வெளியாகும் அல்லு அர்ஜுன் - ஃபகத் ஃபாசிலின் 'புஷ்பா'

டிசம்பர் 17-ல் வெளியாகும் அல்லு அர்ஜுன் - ஃபகத் ஃபாசிலின் 'புஷ்பா'
Published on: 

அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்திருக்கிறது படக்குழு.

’அலா வைகுந்தபுரம் லோ’ படத்தின் வெற்றிக்குப் பிறகு தெலுங்கின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன், பிரபல இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் ‘புஷ்பா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். செம்மரக்கட்டை கடத்தல் கதைக்களத்தைக் கொண்ட இப்படத்தில் கடத்தல்கார லாரி டிரைவர் புஷ்பராஜ் கதாபாத்திரத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கிறார். ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடிக்க தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.வில்லனாக மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் ’பன்வார் சிங் ஷெகாவத் ஐபிஎஸ்’ கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஸ்ரீவள்ளி என்ற பழங்குடியினப் பெண் கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள ‘புஷ்பா’ படத்தின் முதல் பாடம் வரும் டிசம்பர் 17 ஆம் தேதி தியேட்டார்களில் வெளியாகிறது என்று படக்குழு தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com