\
ரூ.300 கோடியை கடந்த தியேட்டர் வசூல் - ஜனவரி 7ல் ஓடிடியில் வெளியாகும் புஷ்பா

ரூ.300 கோடியை கடந்த தியேட்டர் வசூல் - ஜனவரி 7ல் ஓடிடியில் வெளியாகும் புஷ்பா

ரூ.300 கோடியை கடந்த தியேட்டர் வசூல் - ஜனவரி 7ல் ஓடிடியில் வெளியாகும் புஷ்பா
Published on: 

நடிகர் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகான ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் - ராஷ்மிகா - ஃபகத் ஃபாசில் நடித்த புஷ்பா கடந்த டிசம்பர் 17 ஆம் தேதி வெளியாகி வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக, இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் இசையில் அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட் அடித்ததால் ரசிகர்களை ரிப்பீட் மோடில் தியேட்டர் வரவைத்தது. இதனால், கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வெளியான முக்கியமான படங்களே வசூலில் பின்னடைவு அடைந்தன என்று தியேட்டர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

’புஷ்பா’ வெளியான முதல் வாரத்தில் உலகம் முழுக்க ரூ.166 கோடி ரூபாய்யும், இரண்டாவது வாரத்தில் ரூ.222 கோடி ரூபாய்யும் வசூல் செய்துள்ளது. தற்போது வரை உலகம் முழுவதிற்கும் 300 கோடி ரூபாயை கடந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகான ‘புஷ்பா’ படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் கைப்பற்றியுள்ளதாகவும் வரும் ஜனவரி 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது என்றும் உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com