\
தனி விமானத்தில் மும்பை பறந்த ‘புஷ்பா’ படக்குழு

தனி விமானத்தில் மும்பை பறந்த ‘புஷ்பா’ படக்குழு

தனி விமானத்தில் மும்பை பறந்த ‘புஷ்பா’ படக்குழு
Published on: 

நடிகர் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ நாளை வெளியாவதையொட்டி தனி விமானத்தில் மும்பை சென்றுள்ளது படக்குழு.

’அலா வைகுந்தபுரம் லோ’ படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் அல்லு அர்ஜுன் சுகுமார் இயக்கத்தில் ‘புஷ்பா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்க வில்லனாக மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் ’பன்வார் சிங் ஷெகாவத்’ ஐபிஎஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள ‘புஷ்பா’ தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட ஐந்து மொழிகளில் நாளை தியேட்டர்களில் வெளியாகிறது. இதனையொட்டி, படக்குழுவினர் ஐந்து மாநிலங்களிலும் செய்தியாளர் சந்திப்பை நடத்தி படத்தை விளம்பரப்படுத்தி வருகின்றனர்.

கடந்தவாரம் ‘புஷ்பா’ படக்குழுவினரின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ‘புஷ்பா’ இந்தியில் வெளியாவதால் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் உள்ளிட்டோர் தனி விமானம் மூலம் மும்பையில் நடக்கும் செய்தியாளர் சந்திப்புக்கு தனி விமானத்தில் கேரளாவின் கொச்சியிலிருந்து சென்றுள்ளனர்.

மூவரும் உற்சாகமுடன் விமானத்தில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை நடிகர் தேவிஸ்ரீ பிரசாத் பகிர்ந்திருக்கிறார். அல்லு அர்ஜுன் , ஃபகத் ஃபாசில் என ஸ்டார் நடிகர்கள் நடித்திருந்தாலும் ‘புஷ்பா’ படத்தின் பாடல்களும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் எகிற வைத்துள்ளன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com