\
’ராட்சசன்’ இந்தி ரீமேக்கில் அக்‌ஷய் குமார்

’ராட்சசன்’ இந்தி ரீமேக்கில் அக்‌ஷய் குமார்

’ராட்சசன்’ இந்தி ரீமேக்கில் அக்‌ஷய் குமார்
Published on: 

தமிழில் சூப்பர் ஹிட் அடித்த ‘ராட்சசன்’ இந்தி ரீமேக்கில் நடிகர் அக்‌ஷய் குமார் நடிக்கவிருக்கிறார் என்று உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன.

நூற்றாண்டு கண்ட தமிழ் சினிமாவில் முதல் பத்து த்ரில்லர் படங்களை பட்டியலிட்டால் கட்டாயம் ராம்குமார் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘ராட்சசன்’ படமும் இடம்பெறும். த்ரில்லர் கதைக்களத்தில் எதிர்பாராத ட்விஸ்டுகளால் ரசிகர்களின் இதயத்துடிப்பை எகிற வைத்திருப்பார் ராம்குமார். காவலராக நடிப்பில் கவனம் ஈர்த்தார் விஷ்ணு விஷால். தெலுங்கில் இப்படம் ரீமேக் ஆகிவரும் நிலையில், தற்போது இந்தியிலும் ரீமேக் ஆகவிருக்கிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் அக்‌ஷய் குமார் தயாரிப்பதோடு விஷ்ணு விஷால் கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகவும் ரகுல் ப்ரீத் சிங் ஹீரோயினாக நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இப்படத்தை, அக்‌ஷய்குமாரின் ’பெல்பாட்டம்’ படத்தை இயக்கிய ரஞ்சித் திவாரி இயக்குகிறார். தயாரிப்பாளர் வாசு பகானியுடன் இணைந்து அக்‌ஷய் குமார் தயாரிக்கவிருக்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com