’ஹீரோ’ சிவகார்த்திகேயனுக்கு விருந்து கொடுத்த நாகார்ஜுனா மகன்!

’ஹீரோ’ சிவகார்த்திகேயனுக்கு விருந்து கொடுத்த நாகார்ஜுனா மகன்!
’ஹீரோ’ சிவகார்த்திகேயனுக்கு விருந்து கொடுத்த நாகார்ஜுனா மகன்!

’ஹீரோ’ படத்தில் நடித்துவரும் சிவகார்த்திகேயனுக்கு தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மகன் அகில், விருந்து கொடுத்துள்ளார்.

’நம்ம வீட்டுப் பிள்ளை’ பட ஹிட்டுக்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிக்கும் படம், ‘ஹீரோ’. அர்ஜூன், கல்யாணி பிரியதர்ஷன், அபய் தியோ, இவானா உட்பட பலர் நடிக்கின்றனர். பி.எஸ்.மித்ரன் இயக்குகிறார். ஜார்ஜ்.சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் நடந்து வருகிறது. 

இதையடுத்து, பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா - நடிகை அமலா தம்பதியின் மகன் அகில், சிவகார்த்திகேயனை ஐதராபாத்தில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்தார். அகில், தெலுங்கு படங்களில் ஹீரோவாக நடித்துவருகிறார்.  அதன் பேரில் சிவகார்த்திகேயன், இயக்குநர் மித்ரன், ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் ஆகியோர் அவர் வீட்டிற்குச் சென்றனர். அங்கு ’ஹீரோ’ டீமுக்கு இரவு விருந்து அளித்தார் அகில்.

அப்போது சிவகார்த்திகேயனின் படங்கள் பற்றியும் தமிழ் சினிமா பற்றியும் அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர். பின்னர், இது பற்றி சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட அகில், ’ஹீரோ’ டீமுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com