சினிமா
மூன்று மொழிகளில் வெளியானது ‘வலிமை’ ட்ரெய்லர்: தெலுங்கு ட்ரெய்லரை வெளியிட்ட மகேஷ் பாபு
மூன்று மொழிகளில் வெளியானது ‘வலிமை’ ட்ரெய்லர்: தெலுங்கு ட்ரெய்லரை வெளியிட்ட மகேஷ் பாபு
நடிகர் அஜித்தின் ‘வலிமை’ இந்தி, தெலுங்கு, கன்னட ட்ரெய்லரை வெளியிட்டுள்ளது படக்குழு.
ஹெச்.வினோத் - போனி கபூர் - அஜித் கூட்டணி மூன்றாவது முறையாக ‘வலிமை’ படத்தில் இணைந்துள்ளனர். நாயகியாக பாலிவுட் நடிகை ஹீமா குரேஷி நடிக்கிறார். அஜித்துடன் சுமித்ரா, கார்த்திகேயா, சைத்ரா உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
வரும் பிப்ரவர் 24 ஆம் தேதி ‘வலிமை’ வெளியாவதையொட்டி ஏற்கெனவே தமிழ் ட்ரெய்லர் வெளியாகிவிட்டதால், தற்போது இந்தி,தெலுங்கு, கன்னட மொழியில் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளது படக்குழு. இந்தியில் நடிகர் அஜய் தேவ்கானும், தெலுங்கில் நடிகர் மகேஷ் பாபுவும், கன்னட ட்ரெய்லரை கிச்சா சுதீப்பும் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளனர்.