பிப்ரவரி 24-ல் வெளியாகும் ‘வலிமை’? - புது தகவலால் உற்சாகத்தில் ரசிகர்கள்

பிப்ரவரி 24-ல் வெளியாகும் ‘வலிமை’? - புது தகவலால் உற்சாகத்தில் ரசிகர்கள்
பிப்ரவரி 24-ல் வெளியாகும் ‘வலிமை’? - புது தகவலால் உற்சாகத்தில் ரசிகர்கள்

அஜித்தின் ‘வலிமை’ வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி வெளியாகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 

பொங்கலையொட்டி கடந்த ஜனவரி 13 ஆம் தேதி வெளியாவதாக இருந்த ‘வலிமை’ படத்தினை கொரோனா அதிகரிப்பாலும் தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்பதாலும் தள்ளி வைத்தது படக்குழு. இதனால், ஏப்ரலில் வெளியாகும் ‘பீஸ்ட்’டுக்கு முன்னால் ’வலிமை’ படத்தினை மார்ச் மாதம் கொண்டுவர படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால், தற்போது தமிழக அரசு ஊரடங்கு விதிகளையும் கொரோனா விதிமுறை கட்டுப்பாடுகளையும் தளர்த்தியுள்ளதால், வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி ‘வலிமை’ படத்தினை திரைக்கு கொண்டுவர திட்டிட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு,முன்னதாக ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அஜித்துடன் பாலிவுட் நடிகை ஹீமா குரேஷி நாயகியாகவும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடித்துள்ளார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com