''அஜித் சார் தலைமுடியை ‘வலிமை’க்காக கருமையாகவே வைக்கச்சொன்னேன். ஆனால்?'' - ஹெச். வினோத்

''அஜித் சார் தலைமுடியை ‘வலிமை’க்காக கருமையாகவே வைக்கச்சொன்னேன். ஆனால்?'' - ஹெச். வினோத்

''அஜித் சார் தலைமுடியை ‘வலிமை’க்காக கருமையாகவே வைக்கச்சொன்னேன். ஆனால்?'' - ஹெச். வினோத்
Published on

“அஜித் சாரின் தலைமுடியை ‘வலிமை’ படத்திற்காக கருமையாகவே வைக்கச் சொன்னேன்” என்று பேசியுள்ளார் இயக்குநர் ஹெச். வினோத்

ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து முடித்துள்ளார். பாலிவுட் நடிகை ஹீமா குரேஷி ஹீரோயினாகவும் வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடித்துள்ளார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளியான இரண்டு பாடல்களுமே கவனம் ஈர்த்துள்ளது. 2022 பொங்கலையொட்டி ‘வலிமை’ வெளியாகிறது. படத்திற்கான எதிர்பார்ப்புகள் கூடியுள்ள நிலையில் இயக்குநர் ஹெச். வினோத் டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்தப் பேட்டியியில் அஜித்துடனான அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

அதில், “’வலிமை’ படத்தில் அஜித் சார் ஒரு குடும்பத்தின் மகனாக நடிப்பதால், அவரது தலைமுடியை கருப்பு நிறத்திலேயே வைக்குமாறு கேட்டுக்கொண்டேன். ஆனால், அவர் ஆரம்பத்தில் தயக்கம் காட்டினாலும் கதைக்காக புரிந்துகொண்டு ஒப்புக்கொண்டார். படத்தில் அவரது கதாபாத்திரம் புத்திசாலித்தனமானது; நுட்பமானது.‘வலிமை’ கதையை முதலில் எழுதும்போது ஹீமா குரேஷியின் கதாபாத்திரத்தை காதல் கதாபாத்திரமாகத்தான் எழுதினேன். பின்பு, கொரோனா சூழலில் கதை மாற்றப்பட்டதால் விசாரணை அதிகாரியாக அவரது கதாபாத்திரத்தை வடிவமைத்தேன்” என்றவர், ’அஜித் 61’ படத்தின் அப்டேட்டையும் பகிர்ந்துகொண்டுள்ளார். ‘அடுத்தப்படத்தில் அஜித் சாருக்கு ஆக்‌ஷன் காட்சிகள் குறைவாகவும் வசனங்கள் அதிகம் பேசும்படியும் காட்சிகள் அமைக்க திட்டமிட்டுள்ளோம்” என உற்சாகமுடன் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com