”நான் கேம் ஆரம்பிச்சி ரொம்ப நேரம் ஆச்சி தம்பி” : தெறிக்கவிடும் வலிமை கிளிம்ப்ஸ்

”நான் கேம் ஆரம்பிச்சி ரொம்ப நேரம் ஆச்சி தம்பி” : தெறிக்கவிடும் வலிமை கிளிம்ப்ஸ்

”நான் கேம் ஆரம்பிச்சி ரொம்ப நேரம் ஆச்சி தம்பி” : தெறிக்கவிடும் வலிமை கிளிம்ப்ஸ்
Published on

அஜித்தின் ’வலிமை’ படத்தின் கிளிம்ப்ஸ் தற்போது வெளியாகி இருக்கிறது.

’நேர்கொண்ட பார்வை’ வெற்றிக்குப் பிறகு மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹீமா குரேஷியும், வில்லனாக கார்த்திகேயாவும் நடிக்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின், முதல் பாடல் ‘நாங்க வேற மாரி’ வெளியாகி கவனம் ஈர்த்த நிலையில் பொங்கலையொட்டி ‘வலிமை’ வெளியாகிறது என்று தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

விரைவில் டீசரும் படத்தின் இரண்டாம் பாடலும் வெளியாகவுள்ள நிலையில், ‘வலிமை’ படத்தின் கிளிம்ப்ஸ் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகியுள்ளது. அதில், ”நீங்கள் கடைந்தெடுத்த விஷம் நாங்கள். சாத்தானின் அடிமைகள் நாங்கள். இருள் மலைதான் எங்கள் உலகு. அதில் அத்துமீறி எவனாவது கால் வைத்தால்” என்று வில்லன் கார்த்திகேயா குரல் ஒலிக்க அஜித்தில் கால் தீப்பொறியுடன் பதிக்க யுவன் இசையும் சேர்ந்து இதயத்தை தெறிக்க விடுகிறது .

’அர்ஜுன் நீ என் ஈகோவைத் தொட்டுட்ட’ என்று கார்த்திகேயா பேச, ‘நான் கேம் ஆரம்பிச்சி ரொம்ப நேரம் ஆச்சி தம்பி’ என்று எதிரடி கொடுக்கிறார். பின்னணியில் அஜித் பைக் ஓட்டும் காட்சிகள் வானத்திலும்... பில்டிங்குக்கு பில்டிங் பைக்கிலேயே பறக்கும் காட்சிகளும் கவனம் ஈர்க்கின்றன. இந்த வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் வைரல் ஆக்கி வருகின்றனர். வெளியான அரை மணி நேரம் கூட ஆகவில்லை கிட்டதட்ட 7 லட்சம் பேர் பார்வையை கடந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com