\
தார் பாலைவனத்தில் ‘தல’ அஜித் - வைரல் புகைப்படங்கள்

தார் பாலைவனத்தில் ‘தல’ அஜித் - வைரல் புகைப்படங்கள்

தார் பாலைவனத்தில் ‘தல’ அஜித் - வைரல் புகைப்படங்கள்
Published on

நடிகர் அஜித் தார் பாலைவனத்தில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

‘வலிமை’ படப்பிடிப்பு முடிந்ததால் அஜித் சமீபத்தில் உலகையே பைக்கால் சுற்றிய பெண்மணி மாரல் யாசர்லூவை டெல்லியில் சந்தித்து தனியாக பயணம் செய்வது குறித்து ஆலோசனைகளைக் கேட்டறிந்தார். அதன்பிறகு, அஜித் தனியாக பைக்கிலேயே பயணம் செய்யும் புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன.

தற்போது, டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் தொடர்ச்சியாக சுற்றுப்பயணம் செய்து வருகிறார். சமீபத்தில் டெல்லி தாஜ்மஹால் பயணம் செய்தவர், பாகிஸ்தானையும் இந்தியாவையும் இணைக்கும் ‘வாகா’ எல்லைக்குச் சென்று ராணுவ வீரர்களுடன் உற்சாகமுடன் உரையாடினார்.

அஜித் பைக்கில் இருக்கும் புகைப்படம், ராணுவ வீரர்களுடன் உரையாடுவது, செல்ஃபி எடுத்துக்கொண்டது போன்ற புகைப்படங்கள் வெளியாகி கவனம் ஈர்த்தன.

இந்த நிலையில், தற்போது அஜித் ராஜஸ்தானிலுள்ள தார் பாலைவனத்தில் பைக்கின் நிழலில் அமர்ந்திருக்கும் புகைப்படங்கள், தார் பாலைவனம் அருகிலுள்ள லுனி ஆற்றின் பாறை முனையில் நின்றிருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com