நடிகர் அஜித் குமார்.
நடிகர் அஜித் குமார்.முகநூல்

“இந்த பயணம் என்னைப் பற்றியது மட்டுமல்ல! உங்களைப் பற்றியதும்தான்” - அஜித் வெளியிட்ட அசத்தல் அறிக்கை!

ரேஸில் வெற்றிப்பெற்றதற்கு தன்னை பாராட்டிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார் நடிகர் அஜித் குமார்.
Published on

விடாமுயற்சி, குட் பேட் அக்லி முதலிய இரண்டு திரைப்படங்களில் ஒரே நேரத்தில் நடித்து முடித்த நடிகர் அஜித்குமார், படப்பிடிப்பு வேலைகளை முடித்தபிறகு துபாயில் நடக்கும் கார் பந்தயத்தில் கலந்துகொள்ள புறப்பட்டுச்சென்றார்.

அஜித்குமார்
அஜித்குமார்

இதற்காக, ‘அஜித்குமார் ரேஸிங்’  என்ற அணியையும் உருவாக்கினார். இந்தவகையில், துபாயில் நடைபெற்ற 24H கார் பந்தயத்தில் தகுதிச்சுற்றில் ‘அஜித்குமார் ரேஸிங்’ அணி பங்கேற்றது. அதில், 7வது இடத்தை பிடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறிய அஜித்குமார் ரேஸிங் அணி, 992 பிரிவு கார் பந்தயத்தில் 3வது இடத்தை பிடித்து அசத்தியது.

இதற்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், ரசிகர்கள், நலன் விரும்பிகள் என அனைவரும் தங்களது வாழ்த்துக்களை அஜித்திற்கு தெரிவித்திருந்தனர். இதற்கிடையே நேர்காணல் ஒன்றி பேசிய நடிகர் அஜித், “அஜித் வாழ்க, விஜய் வாழ்க-னு சொல்றீங்களே, நீங்க எப்ப வாழப் போறீங்க?” என்றும், “ஆரோக்கியமான உடல், சிக்ஸ் பேக்கை விட மனநலம் முக்கியம்” என்றும் ரசிகர்களுக்கு ஒரு சில அறிவுரைகளை வழங்கியிருந்தார்.

நடிகர் அஜித் குமார்.
அஜித் வாழ்க, விஜய் வாழ்க-னு சொல்றீங்களே.. நீங்க எப்ப வாழப் போறீங்க? - ஃபேன்ஸ்-க்கு அஜித் வேண்டுகோள்!

அந்த நேர்காணலை தொடர்ந்து பொங்கல் தினமான இன்று, வாழ்த்தும் நன்றியும் தெரிவித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார் அஜித்.

அதில், "துபாய் கார் பந்தய ரேஸின் போதும் நிகழ்வுக்கு பின்னரும் இப்போதும் எப்போதும் நீங்கள் எனக்கு கொடுத்து வரும் ஆதரவும் ஊக்கமும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எல்லாம் வல்ல இறைவன், எனது குடும்பத்தினர், திரைத்துறையினர், ஊடகங்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டுப் பிரமுகர்கள், நலம் விரும்பிகள் மற்றும் எனது அன்புக்குரிய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல எனக்கு வார்த்தைகள் போதவில்லை.

அனைவருக்கும் நன்றி தெரிவித்தும், பொங்கல் வாழ்த்து தெரிவித்தும் நடிகர் அஜித் வெளியிட்ட அறிக்கை
அஜித் வெளியிட்ட அறிக்கை

இந்த அசைக்க முடியாத அன்பும் ஊக்கமும்தான் எனது ஆர்வத்திற்கும் விடாமுயற்சிக்கும் உந்து சக்தியாக உள்ளது. என் முன் இருக்கும் சவால்களை உடைத்து மோட்டார்ஸ்போர்ட்டில் புதிய சாதனைகள் படைக்கவும் தூண்டுதலாக உள்ளது. இந்த பயணம் என்னைப் பற்றியது மட்டுமல்ல! உங்களைப் பற்றியதும்தான். நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை மெய்ப்பிக்க ஒவ்வொரு நொடியும் நான் கடமைப்பட்டுள்ளேன்.

அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் மற்றும் சங்கராந்தி நல்வாழ்த்துக்கள்!" என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com