பிப்ரவரி 22 அன்று அஜித்தின் ‘விசுவாசம்’ படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக செய்தி பரவி வருகிறது.
இயக்குநர் சிவாவின் இயக்கத்தில் அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘விவேகம்’. இந்தப் படத்தை தொடர்ந்து அஜித்தின் அடுத்த படத்தை சிவாவே இயக்க இருக்கிறார். அதற்கான தலைப்பு ‘விசுவாசம்’ என வைக்கப்பட்டுள்ளது. இதற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வந்தன. அதன் தொடர்ச்சியாக இப்படத்திற்கான படப்பிடிப்பு வரும் பிப்ரவரி 22 அன்று ஆரம்பிக்கபட உள்ளதாக தகவல் வெளிவர தொடங்கியுள்ளன. தற்சமயம் நடந்து வந்த துணை நடிகர்களின் தேர்வு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் படக்குழு அடுத்த கட்டமாக படப்பிடிப்பில் இறங்கியுள்ளது.