வலிமை ’நாங்க வேற மாரி’ பாடல்: ஒரே நாளில் 1 மில்லியன் லைக்குகள்; ட்ரெண்டிங்கில் முதலிடம்

வலிமை ’நாங்க வேற மாரி’ பாடல்: ஒரே நாளில் 1 மில்லியன் லைக்குகள்; ட்ரெண்டிங்கில் முதலிடம்
வலிமை ’நாங்க வேற மாரி’ பாடல்: ஒரே நாளில் 1 மில்லியன் லைக்குகள்; ட்ரெண்டிங்கில் முதலிடம்

’வலிமை’ படத்தின் ’நாங்க வேற மாரி’ பாடல் வெளியான ஒரே நாளில் 1 மில்லியன் லைக்ஸ்களை குவித்துள்ளதோடு யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

’என்னை அறிந்தால்’ படத்தில் இடம்பிடித்த ‘அதாரு அதாரு’ பாடல் ஹிட்டிற்குப்பிறகு, விக்னேஷ் சிவன் அஜித்திற்கு இரண்டாவது முறையாக ’வலிமை’ படத்தின் முதல் பாடலான ‘நாங்க வேற மாரி’ பாடலை எழுதியிருக்கிறார். நேற்று முன்தினம் இரவு 10.45 மணிக்கு வெளியான இப்பாடல், வெளியான ஒரு நாளிற்குள் யூடியூபில் 1 மில்லியன் லைக்குகளைக் குவித்துள்ளதோடு யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடத்திலும் உள்ளது.

மேலும், ஒரே நாளில் 9 மில்லியன் பார்வைகளைக் கடந்து 10 மில்லியன் பார்வைகளைத் தொடவிருக்கிறது. இப்போதுவரை ட்விட்டர் ட்ரெண்டிங்கிலும் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

’தீனா’, ’பில்லா’, ’ஏகன்’, ‘பில்லா 2’, ’மங்காத்தா’, ‘ஆரம்பம்’, ‘நேர்கொண்ட பார்வை’ என அஜித், யுவன் கூட்டணி எப்போதும் ரசிகர்களுக்கு சூப்பர் ஹிட் கூட்டணியாக அமைந்தது போன்றே, ‘வலிமை’யும் இருப்பதாக ரசிகர்கள் கருத்திட்டு வருகிறார்கள்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com