\
’வலிமை’ படப்பிடிப்பில் அஜித்: லேட்டஸ்ட் வைரல் போட்டோ

’வலிமை’ படப்பிடிப்பில் அஜித்: லேட்டஸ்ட் வைரல் போட்டோ

’வலிமை’ படப்பிடிப்பில் அஜித்: லேட்டஸ்ட் வைரல் போட்டோ
Published on

’வலிமை’ படப்பிடிப்பில் இருக்கும் அஜித்தின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். கொரோனா ஊரடங்கால் இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு முடியாத நிலையில் தள்ளிப்போனது. தற்போது படப்பிடிப்புகள் நடத்த அனுமதி அளித்துள்ளதால், தற்போது முக்கியமான சண்டைக் காட்சிகளும் இணைப்புக் காட்சிகளும் ஹைதராபாத்தில் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், ’வலிமை’ படப்பிடிப்புத் தளத்தில் ஸ்டைலிஷ் லுக்கில் இருக்கும் அஜித்துடன் ரசிகர் ஒருவர் எடுத்துக்கொண்டப் லேட்டஸ்ட் புகைப்படம் வைரலாகி வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com