‘நான் என்ன கொலைக்காரனா? கொள்ளைக்காரனா?’ - ரசிகரை வம்பிழுத்த நடிகர் அஜித்; வைரல் வீடியோ

‘நான் என்ன கொலைக்காரனா? கொள்ளைக்காரனா?’ - ரசிகரை வம்பிழுத்த நடிகர் அஜித்; வைரல் வீடியோ
‘நான் என்ன கொலைக்காரனா? கொள்ளைக்காரனா?’ - ரசிகரை வம்பிழுத்த நடிகர் அஜித்; வைரல் வீடியோ

நடிகர் அஜித் தற்போது இந்தியாவில் பைக் சுற்றுப் பயணம் மேற்கொண்டுவரும்நிலையில், ரசிகர் ஒருவரிடம் நகைச்சுவையாக பேசிய வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

ஹெச் வினோத் இயக்கத்தில் ‘வலிமை’ படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் நடித்து வரும் திரைப்படம் ‘ஏகே 61’. இந்தப் படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கன், பகவதி பெருமாள், மகாநதி சங்கர், ஜி.எம். சுந்தர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், சென்னை உள்ளிட்டப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. ‘ஏகே 61’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கைதராபாத்தில் முடிவடைந்தநிலையில், ஐரோப்பியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அஜித், பின்னர் இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்காக விசாகப்பட்டிணம் சென்றார்.

இதனைத் தொடர்ந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடைபெற உள்ளநிலையில், தற்போது மீண்டும் இமயமலைப் பகுதிகளில் பைக்கில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார் நடிகர் அஜித். இந்தப் பயணத்தின்போது கார்கில், லடாக், கேதர்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட இடங்களுக்கு நடிகர் அஜித் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் புகைப்படங்களும் வெளியாகி வைரலாகி வருகின்றன. அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வரைப்படத்தையும், அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், இந்தச் சுற்றுப் பயணத்தில் ரசிகர் ஒருவர், 3 நாட்களாக அவரை தேடுவதாக கூறியதும், நான் என்ன கொலைக்காரனா, கொள்ளைக்காரனா என்று நகைச்சுவையாக கேட்கும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com