“அஜித்துக்கு அரசியலுக்கு வரும் எண்ணமில்லை” - அஜித் மேலாளர் சுரேஷ் சந்திரா ட்வீட்

“அஜித்துக்கு அரசியலுக்கு வரும் எண்ணமில்லை” - அஜித் மேலாளர் சுரேஷ் சந்திரா ட்வீட்
“அஜித்துக்கு அரசியலுக்கு வரும் எண்ணமில்லை” - அஜித் மேலாளர் சுரேஷ் சந்திரா ட்வீட்

“அஜித்துக்கு அரசியலுக்கு வரும் எண்ணமில்லை”  என்று அஜித் சார்பில், அஜித் மேலாளர் சுரேஷ் சந்திரா ட்வீட் செய்துள்ளார்.

‘வலிமை’ படம் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான 24 ஆம் தேதி வெளியானதால் ’அஜித் அரசியலுக்கு வருகிறார்’ என்று ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் பேசியதாக ஊடகம் ஒன்றில் வெளியான செய்திக்கு மறுப்புத் தெரிவித்து அஜித் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் அஜித் சார்பாக விளக்கம் கொடுத்துள்ளார்.

அவரது அறிக்கையில், ”அஜித்குமாருக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை. எனவே, இதுபோன்ற தவறான தகவல்கள் பரப்புவதை தவிர்க்குமாறு ஊடகவியலாளர்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com