”இதனாலதான் அவர் ஒரு ஜென்டில்மேன்”! - தாமதமாக வந்ததற்கு Sorry சொன்ன நடிகர் அஜித்குமார்!

அசல் படத்தில் ஒன்றாக நடித்த நடிகை பாவனாவை சந்திக்க சென்ற நடிகர் அஜித்குமார், தாமதமாக சென்றதால் Sorry சொன்ன வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
bhavana - ajith
bhavana - ajithX

துணிவு பட வெற்றியைத் தொடர்ந்து நடிகர் அஜித்குமார், மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்துவருகிறார். தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி திரைப்படத்தில், நடிகர் அஜித்குமாருடன் இணைந்து நடிகை த்ரிஷா, அர்ஜூன், ஆரவ் மற்றும் நடிகை ரெஜினா உள்ளிட்ட நடிகர்களும் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்தப் படம் அடுத்தாண்டு ஏப்ரல், மே-ல் வெளியாகும் விதத்தில் தயாரா கிவருகிறது.

தற்போது விடாமுயற்சி திரைப்பட ஷூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், எதேர்ச்சையாக நடிகை பாவானா நடிக்கும் கன்னட படத்தின் படப்பிடிப்பும் அங்கு நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் தன்னுடன் அசல் படத்தில் நடித்த பாவனாவை சந்திக்க சென்ற அஜித்குமார், தாமதமாக சென்றதால் அவரிடம் மன்னிப்பு கேட்கும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் விசாரித்துகொள்ளும் காட்சிகளும் வீடியோவில் இடம்பெற்றுள்ளன.

நடிகை பாவனாவிடம் Sorry சொன்ன அஜித்குமார்!

நடிகர் அஜித்குமாரின் விடாமுயற்சி திரைப்பட ஷூட்டிங் அஜர்பைஜானில் நடைபெற்றுவரும் நிலையில், பாவனாவின் கன்னட படமான “பிங்க் நோட்” திரைப்படமும் அங்கு நடைபெற்றுவருகிறது.

ராஜ்ஷன் இயக்கத்தில் பெண் கதாபாத்திரத்தை மையமாக கொண்டு உருவாகிவரும் 'பிங்க் நோட்' படத்தில் பாவனா இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தான் பாவனாவை சந்தித்திருக்கும் அஜித்குமார் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இணையத்தில் வெளியாகியிருக்கும் அந்த வீடியோவில், “நடிகர் அஜித்குமார் பிங்க் நோட் படப்பிடிப்பிற்கு சென்று பணிபுரியும் திரைப்பட கலைஞர்களுக்கு வாழ்த்தை பகிர்ந்துள்ளார். பின்னர் தாமதமாக வந்ததற்கு “கொஞ்சம் லேட்டாகி விட்டது சாரி” என நடிகை பாவனாவிடம் Sorry கேட்கிறார். அதற்கு பாவனா “நீங்க லேட்டாக வந்ததால், நானும் லேட்டாக வந்தேன்” என்று ஜாலியாக கூற இருவரும் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் விசாரித்து கொள்கின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை அதிகமாக பகிர்ந்துவரும் அஜித் ரசிகர்கள், அஜித்தை ஜென்டில்மேன் என புகழ்ந்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com