car race
car racept web

போட்டியின் நடுவே பழுதான அஜித்தின் கார்...

“கார் ரேசிங் என்பது பணம் சம்பாதிக்கும் விளையாட்டு அல்ல. அதற்கு முழுமையான கவனம், உடல் தகுதி, மன அமைதி மற்றும் கடின உழைப்பு தேவை ” - நடிகர் அஜீத்குமார்
Published on

ரேசராக அஜீத்தின் பயணம்  

செ. வாசு

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித் குமார். இவர் திரைப்படங்களைப் போலவே தனக்கு மிகவும் பிடித்த துறையாக இருக்கும் கார் ரேஸிங்கில் மிகுந்த ஆர்வம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் அவர் கலந்து கொண்ட கார் ரேஸ் அவரது ரசிகர் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் கவனத்தை ஈர்த்தது. நடிகராக மட்டுமல்லாமல், ஒரு ரேசராகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர். அவர் பல சர்வதேச கார் பந்தயங்களில் பங்கேற்று வருகிறார். 24 Hours Dubai, Asian Le Mans Series போன்ற போட்டிகளில் கலந்து கொண்டு, “Ajith Kumar Racing Team” மூலம் இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வருகிறார்.

Ajith Kumar Urges Fans to Support Indian Motorsport, F1 Dream
ajith kumarpt web

சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அஜித், “கார் ரேசிங் என்பது பணம் சம்பாதிக்கும் விளையாட்டு அல்ல. அதற்கு முழுமையான கவனம், உடல் தகுதி, மன அமைதி மற்றும் கடின உழைப்பு தேவை ” என கூறினார். மேலும், சினிமாவும், ரேஸ் இந்த இரண்டிலும் தனக்கு ஒரே அளவு ஆர்வம் இருப்பதாகவும், இரண்டையும் சமநிலையுடன் முன்னெடுக்க முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் அவர் கார் ரேசிங் என்பது வேகம், ஒழுக்கம், பாதுகாப்பு ஆகியவை ரேசிங்கின் அடிப்படை என அவர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்

பழுதான அஜீத் அணியின் கார் 

2025, 2026 ஆம் ஆண்டுக்கான ASIAN LEMANS SERIES 3 நாடுகளில் நடைபெறுகிறது. ASIAN LEMANS முதல்  தொடர் நேற்று முதல் மலேசியாவில் தொடங்கியது. இது மொத்தமாக மூன்று நாடுகளில் இரண்டு இரண்டு நாள்களாக நடைபெறும். மலேசியாவை தொடர்ந்து துபாய், அபுதாபி என மூன்று நாடுகளில் நடைபெற  இருக்கிறது. மலேசியாவில் இன்று தொடங்கிய முதல் ரேஸில் முதல் லேப்பில் அஜித்குமார் கார் வேறொருவர் காரில் மோதியது. அதன் காரணமாக அஜித்குமார் கார் மிகவும் சேதமடைந்து உள்ளது, மேலும் அவருடைய காரில் இருந்து எரிபொருள் வெளியானதை தொடர்ந்து, அவர் கார் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

car race
car racept web

தற்போது அதை பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டுவருகிறார்கள். இந்தியாவில் இருந்து formula 1 போட்டியில் பங்கேற்ற நரேன் கார்த்திகேயன் அஜித்குமார் ரேஸிங் அணியில் இடம்  பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கார் ரேஸிங் நேற்று 4 மணி நேரம் நடந்த நிலையில் இன்று 4 மணி நேரம் நடைபெறும். மொத்தம் 8 மணி நேரம் நடைபெறும் போட்டியில் மிக வேகமாக  மற்றும் அதிக தூரம் பயணம் செய்யக்கூடிய காருக்கு பரிசு அளிக்கப்படும். இதில் அஜித்குமார் நிறுவனம் LMP 3 வகையிலான ரேஸ் காரை பயன்படுத்துகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com