’அஜித் 61’ படப்பிடிப்பு பணிகள் ஹைதராபாத்தில் இன்று துவங்கியது

’அஜித் 61’ படப்பிடிப்பு பணிகள் ஹைதராபாத்தில் இன்று துவங்கியது

’அஜித் 61’ படப்பிடிப்பு பணிகள் ஹைதராபாத்தில் இன்று துவங்கியது
Published on

‘அஜித் 61’ படத்தின் பணிகள் ஹைதராபாத்தில் இன்று துவங்கியுள்ளன.

‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ படங்களைத் தொடர்ந்து அஜித்-ஹெச்.வினோத்-போனி கபூர் கூட்டணி மீண்டும் மூன்றாவது முறையாக ‘அஜித் 61’ படத்தில் இணைகின்றனர். பொங்கலுக்குப்பிறகு ‘அஜித் 61’ படபிடிப்புப் பணிகள் துவங்கும் என்று ஹெச் வினோத் புதிய தலைமுறை டிஜிட்டலுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியிலும் உறுதி செய்திருந்தார்.

இந்த நிலையில், இன்று ஹைதராபாத்தில் ‘அஜித் 61’ படத்திற்காக செட் அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளன. ’வலிமை’ வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் விரைவில் ‘அஜித் 61’ படத்தின் பூஜையுடன் கூடிய அறிவிப்பை படக்குழு வெளியிடவுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும், வரும் மார்ச் மாதம் ‘வலிமை’ படத்தினை வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதால் ‘வலிமை’ வெளியானவுடன் ‘அஜித் 61’ படப்பிடிப்பை துவங்கவுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com