ஹைதராபாத்தில் அஜித் : பூஜையுடன் தொடங்கிய ‘அஜித் 61’ படப்பிடிப்பு!

ஹைதராபாத்தில் அஜித் : பூஜையுடன் தொடங்கிய ‘அஜித் 61’ படப்பிடிப்பு!

ஹைதராபாத்தில் அஜித் : பூஜையுடன் தொடங்கிய ‘அஜித் 61’ படப்பிடிப்பு!
Published on

’அஜித் 61’ படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.

‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ படங்களைத் தொடர்ந்து அஜித்-ஹெச்.வினோத்-போனி கபூர் கூட்டணி மீண்டும் மூன்றாவது முறையாக ‘அஜித் 61’ படத்தில் இணைந்துள்ளனர். நாயகியாக நயன்தாரா அல்லது அதிதி ராவ் நடிப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. ஜிப்ரான் இசையமக்கிறார். கடந்த ஒரு மாதமாக ‘அஜித் 61’ படப்பிடிப்புக்காக ஹைதராபாத்தில் பிரம்மாண்ட அரங்கை படக்குழு அமைத்து வந்தது படக்குழு.

இந்த நிலையில், இன்று ‘அஜித் 61’ படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. பூஜையில், ஹெச். வினோத், போனி கபூர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். படப்பிடிப்பில் கலந்துகொள்ள அஜித் தற்போது ஹைதராபாத் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் படப்பிடிப்பை முடித்து ’அஜித் 61’ படத்தினை வரும் அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையையொட்டி திரைக்குக் கொண்டுவர திட்டமிட்டுள்ளார்கள்.

இப்படத்தில் ‘பிக்பாஸ்’ கவின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் படம் வங்கிக் கொள்ளையை மையப்படுத்தி உருவாகவுள்ளது என்றும் சொல்லப்படுகிறது.

’மங்காத்தா’ படத்திற்குப் பிறகு அஜித், இப்படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 25 கிலோ எடையை குறைக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com