தீபாவளிக்கு ’அஜித் 61’ : 2023 பொங்கலுக்கு ‘அஜித் 62’ ரிலீஸ் - அடுத்தடுத்த அப்டேட்

தீபாவளிக்கு ’அஜித் 61’ : 2023 பொங்கலுக்கு ‘அஜித் 62’ ரிலீஸ் - அடுத்தடுத்த அப்டேட்
தீபாவளிக்கு ’அஜித் 61’ : 2023 பொங்கலுக்கு ‘அஜித் 62’ ரிலீஸ் - அடுத்தடுத்த அப்டேட்

கொரோனா சூழலால் ‘வலிமை’ படப்பிடிப்புத் தாமதமானதால் அஜித்தின் அடுத்தடுத்தப் படங்களை உடனுக்குடன் திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ வெற்றிக்குப்பிறகு இரண்டரை ஆண்டுகள் கழித்து ‘வலிமை’ வெளியாகிறது. இரண்டரை ஆண்டு காத்திருப்பு என்பதால் அஜித் ரசிகர்கள் கொதித்தெழுந்த விஷயங்கள் தமிழகமே அறிந்தவை. அதனால், ’அஜித் 61’, ‘அஜித் 62’ படக்குழுவினர் வரும் தீபாவளிக்கும், 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கும் அடுத்தடுத்தப் படங்களை வெளியிட திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘வலிமை’ படத்திற்குப்பிறகு அஜித் போனி கபூர் தயாரிப்பில் ‘அஜித் 61’ படத்திலும் சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ‘அஜித் 62’ படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதில், ‘அஜித் 61’ படப்பிடிப்பு ஹைதராபாத்தில் மார்ச் 9-ம் தேதி துவங்கவுள்ளது. இப்படம், முடிந்தவுடனேயே சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். இன்னும் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ஆனால், ’அஜித் 62’படத்தினை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பது உறுதி.

கொரோனா சூழலால் ‘வலிமை’ படப்பிடிப்புத் தாமதமானதால் இதே ஆண்டு தீபாவளிக்கு வினோத் இயக்கும் ‘அஜித் 61’ படத்தினையும், 2023 ஆம் ஆண்டு பொங்கலையொட்டி ‘அஜித் 62’ படத்தினையும் வெளியிட அஜித்தும் இதன் படக்குழுவினரும் திட்டமிட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, அஜித் ‘விவேகம்’, ’விஸ்வாசம்’ ஆகிய இரண்டு படங்களில் சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதில், ‘விஸ்வாசம்’ மாபெரும் வெற்றியடைந்தது. குறிப்பாக தமிழகத்தில் 136 கோடி ரூபாய் வசூல் செய்ததாக சொல்லப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com