அடுத்தமாதம் ஷூட்டிங்: தீபாவளிக்கு ரிலீஸ்.. ‘அஜித் 61’ அப்டேட்

அடுத்தமாதம் ஷூட்டிங்: தீபாவளிக்கு ரிலீஸ்.. ‘அஜித் 61’ அப்டேட்
அடுத்தமாதம் ஷூட்டிங்: தீபாவளிக்கு ரிலீஸ்.. ‘அஜித் 61’ அப்டேட்

’அஜித் 61’ படத்தினை வரும் தீபாவளிக்கு திரைக்கு கொண்டுவரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ படங்களைத் தொடர்ந்து அஜித்-ஹெச்.வினோத்-போனி கபூர் கூட்டணி மீண்டும் மூன்றாவது முறையாக ‘அஜித் 61’ படத்தில் இணைந்துள்ளனர். வரும் மார்ச் 9 ஆம் தேதி முதல் ஹைதராபாத்தில் படப்பிடிப்புத் துவங்கவுள்ளது. இதற்காக, பிரம்மாண்ட அரங்கை கடந்த ஒரு மாதமாக ’அஜித் 61’ படக்குழுவினர் அமைத்து வருகிறார்கள். இந்த நிலையில், ‘அஜித் 61’ படத்தினை இந்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு கொண்டுவரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ வெற்றிக்குப்பிறகு இரண்டரை ஆண்டுகள் கழித்து ‘வலிமை’ வெளியாகிறது. இரண்டரை ஆண்டு காத்திருப்பு என்பதால் அஜித் ரசிகர்கள் கொதித்தெழுந்த விஷயங்கள் தமிழகமே அறிந்தவை. அதனால், இந்த ஆண்டே தீபாவளிக்கு ‘அஜித் 61’ படத்தினை கொண்டுவர முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றனர் படக்குழுவினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com