போலீசை கிண்டலடித்து வீடியோ: இந்தி நடிகர் அஜாஸ் கானுக்கு சிறை

போலீசை கிண்டலடித்து வீடியோ: இந்தி நடிகர் அஜாஸ் கானுக்கு சிறை
போலீசை கிண்டலடித்து வீடியோ: இந்தி நடிகர் அஜாஸ் கானுக்கு சிறை

போலீசை கிண்டலடித்து வீடியோ வெளியிட்ட வழக்கில், கைதான இந்தி நடிகர் அஜாஷ் கான் சிறையில் அடைக்கப்பட்டார்.

மும்பையை சேர்ந்தவர் இந்தி நடிகர் அஜாஷ் கான். இவர் தமிழில், சூர்யா நடித்த ’ரத்த சரித்திரம்’ படத்தில் நடித்திருந்தார். பல தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இவர், கடந்த 9 ஆம் தேதி சர்ச்சைக்குரிய வகையில் 2 வீடியோக்களை, சமூக வலைத்தளங்களில் பதிந்திருந்தார். ஒரு வீடியோ பதிவில், ஜார்கண்ட் மாநிலத்தில் கும்பலால், வாலிபர் கொல்லப்பட்டதற்கு பழிவாங்க, ஒன்று சேர வேண்டும் என குறிப்பிட்ட சமூகத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இதே பிரச்னையை மையப்படுத்தி வீடியோ வெளியிட்ட 5 வாலிபர்கள் மீது மும்பை போலீஸ் வழக்குப்பதிவு செய்தது. அதைக் கண்டிக்கும் வகையில், போலீசை கிண்டலடித்து மற்றொரு வீடியோவை வெளியிட்டார். 

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டார். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com