நடிகர் அஜித் அரசியலுக்கு வருகிறார்! நடிகர் ஆரி பேச்சு

நடிகர் அஜித் அரசியலுக்கு வருகிறார்! நடிகர் ஆரி பேச்சு

நடிகர் அஜித் அரசியலுக்கு வருகிறார்! நடிகர் ஆரி பேச்சு
Published on

தமிழகத்திற்கு தேவையான திட்டவிளக்கத்துடன் நடிகர் அஜித் அரசியலுக்கு தயாராகியுள்ளதாக நடிகர் ஆரி தெரிவித்துள்ளார்.

விசிறி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ஆரி, “தளபதி விஜயை பற்றி அனைவருக்கும் பல விஷயங்கள் தெரியும். தற்போது தலை அஜித்தை பற்றி ஒரு விஷயம் சொல்கிறேன். அவரை இதுவரை அரசியல் போட்டியில் நீங்கள் சேர்த்துக்கொள்ளவே இல்லை. அஜித் அரசியலுக்கு வரமாட்டார். ஆனால் அவருக்கு நெருக்கமான ஒருவர் என்னிடம் கூறும் போது, தமிழகத்தின் மேம்பாட்டுப்பணிகள் குறித்து ஒரு விரிவான திட்டத்தை அஜித் தயார் செய்து வைத்துள்ளார். வெளிநாடுகளில் உள்ளது போல மேம்பாட்டுத் திட்டங்களையும் அவர் தமிழகத்திற்காக தயாரித்து வைத்துள்ளார் என தெரிவித்தார். இதுகுறித்து வெளியில் தெரிவிக்க வேண்டாம் என்றும் அந்த நபர் கூறியிருந்தார். 
எனவே அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து கொள்ளுங்கள். அத்துடன் அஜித் விஜய் ரசிகர்கள் ஒற்றுமையாக இருந்து செயல்படுங்கள்” என்று கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com