\
ஊட்டியில் இன்று தொடங்கியது ஆரி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு

ஊட்டியில் இன்று தொடங்கியது ஆரி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு

ஊட்டியில் இன்று தொடங்கியது ஆரி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு
Published on

நடிகர் ஆரி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று ஊட்டியில் தொடங்கியுள்ளது.

‘அலேகா’, உதயநிதியின் ‘நெஞ்சுக்கு நீதி’ உள்ளிட்டப் படங்களில் நடித்து வரும் ஆரியின் அடுத்தப்பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. ’கண்மணி பாப்பா’ படத்தினை இயக்கிய மணி வர்மன் இப்படத்தினை இயக்குகிறார். தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், இயக்குநர்கள் பாக்யராஜ், அமீர், அருண்ராஜா காமராஜ், சிவி குமார் உள்ளிட்டவர்கள் ஆரியை இப்படத்திற்காக வாழ்த்தியுள்ளார்கள்.

அஞ்சுக்குமார் நாயகியாக நடிக்கிறார். எஸ்.ஏ.எஸ் புரொடொக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு படத்தின் பூஜை நடைபெற்ற நிலையில், இன்று ஊட்டியில் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இதனை, ஆரி உற்சாகமுடன் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com