தாய்க்காக சென்னையில் குடியேறும் நடிகர் அமீர்கான்! என்ன காரணம்?

உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது 89 வயது தாயை கவனித்து கொள்வதற்காக சென்னைக்கு தற்காலிகமாக குடியேறவுள்ளார் நடிகர் அமீர்கான்.
நடிகர் அமீர்கான்
நடிகர் அமீர்கான்முகநூல்

உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது 89 வயதான தாயை கவனித்து கொள்வதற்காக சென்னைக்கு தற்காலிகமாக குடியேறவுள்ளார் நடிகர் அமீர்கான்.

பாலிவுட் நடிகர் அமீர்கானின் தாய் ஜீனத் ஹுசைனுக்குகடந்த ஆண்டு அக்டோபரில் மாராடைப்பு ஏற்பட்டது. இதனால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

தாயுடன் நடிகர் அமீர்கான்
தாயுடன் நடிகர் அமீர்கான்முகநூல்

இதனால் தன் தாயுடன் இருந்து அவரை பார்த்து கொள்வது அவருக்கு பக்கபலமாக இருக்கும் என்று நினத்த அவர், மருத்துவமனையின் அருகில் உள்ள ஹோட்டலில் 2 மாதங்கள் தற்காலிகமாக தங்க முடிவு செய்துள்ளார்.

குறிப்பாக நடிகர் அமீர்கான் இயல்பாகவே தனது குடும்பத்தின் மீது அதீத பிரியம் கொண்டவர். மேலும் இதன் அடையாளமாக தனது தாய் ஜீனத் ஹுசைன் மற்றும் தன் குழந்தைகள் ஈரா மற்றும் ஆசாத் ஆகியோருக்காக சிறிது காலம் ஓய்வெடுக்க இருப்பதாக சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தன் குடும்பத்தின் மீது தான் வைத்துள்ள அன்பை குறித்து கூறுகையில், “ சினிமா தான் என்னை என் குடும்பத்திலிருந்து விலக்கி வைத்திருக்கிறது என்று சினிமாவின் மீது நான் கோபம் கொண்டேன். பிறகு என் வீட்டில் உள்ள அனைவரையும் அழைத்து ‘ என் வேலையை முடித்து விட்டேன். இனிமேல் உங்கள் அனைவருடனும் நேரத்தை செலவிட முடிவு செய்துள்ளேன்’ என்று தெரிவித்தேன்” என்று கூறி இருந்தார்.

நடிகர் அமீர்கான்
LEO Movie Review | பார்த்திபன் தான் லியோவா... அதுவா முக்கியம் அந்த LCU..?

இதன் மூலம் அவர் தனது குடும்பத்தின் மீது எவ்வளவு அன்பும் அக்கறையும் வைத்திருக்கிறார் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. இந்நிலையில் தன் தாயின் உடல் நல பாதிப்பால் அவரை அருகில் இருந்து பார்த்து கொள்ளவதற்காக சென்னைக்கு குடியேற இருக்கிறார் நடிகர் அமீர்கான்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com