\
லிங்குசாமி படத்தில் வில்லனாக நடிக்கும் ஆதி: அதிகாரபூர்வ அறிவிப்பு

லிங்குசாமி படத்தில் வில்லனாக நடிக்கும் ஆதி: அதிகாரபூர்வ அறிவிப்பு

லிங்குசாமி படத்தில் வில்லனாக நடிக்கும் ஆதி: அதிகாரபூர்வ அறிவிப்பு
Published on: 

இயக்குநர் லிங்குசாமி இயக்கும் படத்தில் இணைந்துள்ளார் நடிகர் ஆதி.

'சண்டக்கோழி 2’ படத்திற்குப் பின்னர் கடந்த இரண்டு வருடங்களாக படங்கள் இயக்காமல் இருந்த இயக்குநர் லிங்குசாமி, தற்போது தமிழ், தெலுங்கில் பெயரிடப்படாத ’RAPO19’ என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார். தெலுங்கின் முன்னணி நடிகரான ராம்பொத்தேனி ஹீரோவாகவும், வசூல் சாதனை படைத்த ‘உப்பெனா’ பட கீர்த்தி ஷெட்டி ஹீரோயினாகவும் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடர்ச்சியாக ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் நிலையில், ’மிருகம்’, ‘ஈரம்’, ‘அரவான்’ உள்ளிட்டப் படங்களின் மூலம் கவனம் ஈர்த்த ஆதி இப்படத்தில் இணைந்திருக்கிறார். ஹீரோ ராம் பொத்தேனிக்கு வில்லனாக நடிக்கிறார் என்பதை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது படக்குழு.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com