நேரடியாக ஓடிடியில் வெளியாகும் ஆதியின் ‘கிளாப்’: ரிலீஸ் தேதி அறிவிப்பு

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் ஆதியின் ‘கிளாப்’: ரிலீஸ் தேதி அறிவிப்பு
நேரடியாக ஓடிடியில் வெளியாகும் ஆதியின் ‘கிளாப்’: ரிலீஸ் தேதி அறிவிப்பு

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் நடிகர் ஆதியின் ‘கிளாப்’ படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

நடிகர் ஆதி நடிப்பில் கடைசியாக ‘குட்லக் சகி’ வெளியானது. அடுத்ததாக, ‘கிளாப்’ படத்தில் நாயகனாகவும், லிங்குசாமியின் ‘தி வாரியர்’ரில் வில்லனாகவும் நடித்துள்ளார். இதில், ‘கிளாப்’ படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளது படக்குழு. பிரித்வி ஆதித்யா இயக்கத்தில் ‘கிளாப்’ படத்தில் ஆதி, ஆகான்ஷா சிங், பிரகாஷ் ராஜ், மைம் கோபி, முனிஷ்காந்த் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

இளையராஜா இசையமைக்கிறார் என்பதால் ‘கிளாப்’ படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அதனை உறுதிப்படுத்தும் விதமாக ‘கேஜிஎஃப் 2’ படத்தின் தென்னிந்திய ஆடியோ உரிமையை ரூ.7 கோடிக்கு கைப்பற்றிய லஹரி மியூசிக்தான் ‘கிளாப்’ ஆடியோ உரிமையையும் கைப்பற்றியது. இந்த நிலையில், ‘கிளாப்’ நேரடியாக சோனி லைவ் ஓடிடி தளத்தில் வரும் மார்ச் 11-ஆம் தேதி வெளியாகிறது என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com