நடிகர் யோகி பாபுவுக்கு ஆண் குழந்தை

நடிகர் யோகி பாபுவுக்கு ஆண் குழந்தை

நடிகர் யோகி பாபுவுக்கு ஆண் குழந்தை
Published on

நடிகர் யோகிபாபுவுக்கு இன்று குழந்தை பிறந்துள்ளதால், அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியான யோகி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் யோகிபாபு. அதனைத்தொடர்ந்து, சிவகார்த்திகேயன், அஜித்,விஜய், ரஜினி என தமிழின் பெரும்பாலான ஸ்டார்களுடன்  நடித்து முன்னணி காமெடி நடிகரானார். ஆரம்பத்தில் 35 வயதாகும் யோகிபாபு திருமணம் செய்ய பெண் தேடிக்கொண்டிருந்தார்.

அவர் எப்போது திருமணம் செய்வார் என்று எல்லோரும் எதிர்பார்த்துவந்த நிலையில், இந்த வருடம் பிப்ரவரி 5 ஆம் தேதி வேலூரைச் சேர்ந்த மஞ்சு பார்கவி என்ற பெண்ணை குலதெய்வ கோயிலில் எளிமையாக திருமணம் செய்தார். இத்தம்பதிகளின் வரவேற்பு மார்ச் மாதம் நடைபெறவிருந்த நிலையில் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், தற்போது யோகிபாபு மஞ்சு பார்கவி தம்பதியினருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனால்,திரைத்துறை நண்பர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com