பிரபல படத்தொகுப்பாளர் கோலா பாஸ்கர் காலமானார் !
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல முக்கிய படங்களுக்கு படத்தொகுப்பாளராக பணியாற்றிய கோலா பாஸ்கர் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 55.
இயக்குநர் செல்வராகவனின் 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன போன்ற படங்களில் படத்தொகுப்பாளராக பணியாற்றியவர் கோலா பாஸ்கர். மேலும் குஷி, ஒரு கல்லூரியின் கதை, கேடி, போக்கிரி போன்ற படங்களுக்கும் கோலா பாஸ்கர்தான் படத்தொகுப்பாளர். இவர் சில காலமாக தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் இன்று காலை 8 மணியளவில் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். அவருக்கு மனைவியும் , பாலகிருஷ்ணா என்ற மகனும் உள்ளனர். தென்னிந்திய மொழி படங்களில் பணியாற்றியதற்காக இவருக்கு பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. கோலா பாஸ்கர் மறைவுக்கு தெலுங்கு, தமிழ் திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.