\
நடிகை டிஸ்கோ சாந்தி சகோதரரின் மகள் பெங்களூரில் கண்டுபிடிப்பு

நடிகை டிஸ்கோ சாந்தி சகோதரரின் மகள் பெங்களூரில் கண்டுபிடிப்பு

நடிகை டிஸ்கோ சாந்தி சகோதரரின் மகள் பெங்களூரில் கண்டுபிடிப்பு
Published on

நடிகை டிஸ்கோ சாந்தியின் சகோதரரின் மகள் பெங்களூரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

நடிகை டிஸ்கோ சாந்தியின் சகோதரர் அருண்மொழி வர்மன். இவர் சினிமாவில் உதவி இயக்குநராக உள்ளார். அவரது மூத்த மகள் அப்ரீனா. அவரது வயது 17. இவர் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 6தேதி முதல் அவரை காணவில்லை. பாண்டிபஜார் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். 5 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் உரிய விசாரணை தொடங்கப்படவில்லை என்று அவரது குடும்பத்தினர் பத்திரிகையாளர்களை சந்தித்து முறையிட்டிருந்தனர்.
இந்நிலையில் காணாமல் போன அப்ரீனா பெங்களூரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இந்தத் தேடலில் தனது குடும்பத்தினருடன் இணைந்து ஒத்துழைத்த அனைவருக்கும் அவரது குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com