திரையரங்க விதிகளை விஷால் முடிவு செய்யக்கூடாது: அபிராமி ராமநாதன்

திரையரங்க விதிகளை விஷால் முடிவு செய்யக்கூடாது: அபிராமி ராமநாதன்
திரையரங்க விதிகளை விஷால் முடிவு செய்யக்கூடாது: அபிராமி ராமநாதன்

திரையரங்க விதிமுறைகள் குறித்து நடிகர் விஷால் தன்னிச்சையாக முடிவெடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.

புதிய டிக்கெட் விலை தொடர்பாக சென்னையில் திரையரங்க உரிமையாளர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதன் பின், செய்தியாளர்களை சந்தித்த அபிராமி ராமநாதன், தயாரிப்பாளர் சங்கத்திற்கு கட்டளை இடுவது போல் விஷால் பேசக் கூடாது என தெரிவித்தார். நடிகர் சங்கத்திற்கு உள்ளது போல் திரையரங்க‌ங்களுக்கென்று தனி விதிமுறைகள் இருக்கும் நிலையில் விஷாலின் முடிவு தன்னிச்சையானது என்றும் குறிப்பிட்டார். மேலும் விஷாலின் தன்னிச்சையான முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அபிராமி ராமநாதன் தெரிவித்தார்.

தமிழகத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தையே வசூலிக்க வேண்டும். இதற்கு மேல் ஒரு பைசாகூட பொதுமக்கள் கொடுக்க வேண்டாம். அதிகமாக டிக்கெட் கட்டணம் வசூலித்தால் பொதுமக்கள் தயங்காமல் புகார் அளிக்கலாம். திரையரங்குகளில் உள்ள கேன்டீனில், எம்.ஆர்.பி., விலையில் தான் பொருட்களை விற்க வேண்டும். 'அம்மா' குடிநீர் பாட்டில் விற்கப்பட வேண்டும். தண்ணீர் பாட்டிலுடன் தியேட்டருக்கு வருவோரையும் அனுமதிக்க வேண்டும். பார்க்கிங் கட்டணம் வசூலிக்க கூடாது. 'ஆன் லைன்' கட்டணம் விரைவில் ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட அதிரடி அறிவிப்புகளை விஷால் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com