\
நிர்ணயித்த கட்டணமே தியேட்டரில் வசூலிக்கப்படும்: அபிராமி ராமநாதன்

நிர்ணயித்த கட்டணமே தியேட்டரில் வசூலிக்கப்படும்: அபிராமி ராமநாதன்

நிர்ணயித்த கட்டணமே தியேட்டரில் வசூலிக்கப்படும்: அபிராமி ராமநாதன்
Published on

தியேட்டர்களில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணமே வசூலிக்கப்படும் என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அரசு வரைமுறைப் படுத்துவதற்கு முன்பு எங்களுக்கு அளிக்கப்பட்ட டிக்கெட் கட்டணத்தின் விலை ரூ.15 ஆகும். தற்போது நாங்கள் பெரிய படங்களுக்கு நிர்ணயிக்க வேண்டும் எனக்கூறிய கட்டணத்தை அரசு வழங்கிவிட்டது. கேட்ட கட்டணத்தை அரசு கொடுத்த பிறகு நாங்கள் ஏன்? கூடுதலாக விற்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக விற்பனை செய்து, எங்களை நாங்களே மாய்த்துக்கொள்ள தயாராக இல்லை. அது எங்களை சார்ந்தவர்களையும் மாய்த்துவிடும். ” என்று கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com