\
துல்கருக்கு வந்தது அபிஷேக் பச்சன் வாய்ப்பு

துல்கருக்கு வந்தது அபிஷேக் பச்சன் வாய்ப்பு

துல்கருக்கு வந்தது அபிஷேக் பச்சன் வாய்ப்பு
Published on

மம்மூட்டியின் மகனும் நடிகருமான துல்கர் சல்மான் இந்தி சினிமாவில்அறிமுகமாகிறார்.

தமிழில், வாயை மூடி பேசவும், ஓகே கண்மணி படங்களில் நடித்துள்ள துல்கர் சல்மான், இப்போது சோலோ, மகாநதி ஆகிய படங்களில் நடித்துவருகிறார். இந்நிலையில் ரோனிஸ்குருவாலா தயாரிக்கும் இந்திப் படத்தில் அவர் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். 

இதில் ஹீரோவாக இர்பான் கான் நடிக்கிறார். மிதிலா பால்கர் ஹீரோயின். இந்தப் படத்தில் இன்னொரு ஹீரோவாக அபிஷேக் பச்சன் நடிப்பதாக இருந்தது. கால்ஷீட் பிரச்னை காரணமாக அவர் விலகி கொள்ள, அந்த இடத்துக்கு துல்கர் சல்மான் தேர்வாகி இருக்கிறார்.

‘இது காமெடி படம். துல்கரும் இர்பானும் நண்பர்களாக நடிக்கின்றனர். கேரளாவில் இந்த மாத இறுதியில் ஷூட்டிங் தொடங்குகிறது. புதுமுகம் ஆகர்ஷ் குரானா இயக்குகிறார்’ என்று படக்குழு கூறியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com